பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராமுக்கு சம்மன்!

 

பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராமுக்கு சம்மன்!

இந்து கோயில்களின் சிலைகள் குறித்து எம்.பியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார். அந்தப் பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பவே, உடனடியாக மன்னிப்பு கோரினார். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம், ‘அடிங்க’ என்று குறிப்பிட்டிருந்தார். திருமாவளவனை எம்.பி. என்று சொல்வதே வெட்கக்கேடு எனவும் காயத்ரி ரகுராம் பேசியிருந்தார்

பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராமுக்கு சம்மன்!

உடனடியாக காயத்ரி ரகுராமின் உதவியாளர் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தொலைபேசி வாயிலாகத் திட்டத் தொடங்கினர். அதுமட்டுமின்றி அவரது வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், விடுதலை சிறுத்தை கட்சியின் சட்டப்பிரிவு துணை செயலாளரான வழக்கறிஞர் ஏ.காசி என்பவர் சென்னை சைதாப்பேட்டை 23வது குற்றவியல் நடுவர்  நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தங்கள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு, களங்கம் ஏற்படுத்தம் வகையில் நடந்துகொண்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி கவுதமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நடிகை காயத்ரி ராகுராமுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜூலை 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.