கோடை பருவ பயிர்கள்… காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு, தருமபுரி ஆட்சியர் அழைப்பு!

 

கோடை பருவ பயிர்கள்… காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு, தருமபுரி ஆட்சியர் அழைப்பு!

தருமபுரி

தருமபுரி மாவட்ட விவசாயிகள் தங்களது நடப்பாண்டு கோடை பருவத்தில் ராகி, சாமை, துவரை, மக்காச்சோளம் மற்றும் பருத்தி ஆகிய பயிர்களுக்கு வரும் 31ஆம் தேதி வரை காப்பீடு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்டத்தில் ராசி, சாமை, துவரை, மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை காப்பீடு செய்ய அமைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கவும் விவசாயத்தில் நிலை பெற செய்யவும், திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு கோடை பருவத்தில் ராகி, சாமை, துவரை, மக்காச்சோளம் மற்றும் பருத்தி ஆகிய பயிர்களுக்கு வரும் 31ஆம் தேதிவரை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய மக்காச்சோளத்திற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.450, சாமைக்கு ரூ.120, ராகிக்கு ரூ.196, துவரைக்கு ரூ.266, மற்றும் பருத்திக்கு ரூ.590 விவசாயிகளின் பங்கு தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம்.

கோடை பருவ பயிர்கள்… காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு, தருமபுரி ஆட்சியர் அழைப்பு!

அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிட்(AICIL) என்ற முகமையின் மூலம் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு, காப்பீடு செய்துகொள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், மற்றும் பொதுசேவை மையங்களை விவசாயிகள் அணுகலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அடங்கல், நில உரிமைப்பட்டா, ஆதார் நகல், மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்துடன் உரிய பிரியமியத் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

விதைப்புக்கு முன்னரே பியர் காப்பீடு செய்ய கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து விதைப்பு சான்று பெற்றும் கப்பீடு செய்யலாம். மேலும், விவரங்களுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மைத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டும், உழவன் செயலியில் இருந்தும் தகவல்களை பெறலாம், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்