பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்து கட்சி கூட்டத்தில் முடிவு.. சிரோன்மணி அகாலி தளம் அதிரடி

பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்து கட்சி கூட்டத்தில் முடிவு.. சிரோன்மணி அகாலி தளம் அதிரடி

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடருவதா, வேண்டாமா என்பது குறித்து பின்னர் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என சிரோன்மணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று விவசாயிகள் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா மீதான விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும பாதுகாப்பு) ஒப்பந்தம் ஆகியவை நிறைவேறின. இந்த மசோதாக்களுக்கு மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிரோன்மணி அகாலி தளம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் மத்திய அமைச்சராக இருந்த அந்த கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்து கட்சி கூட்டத்தில் முடிவு.. சிரோன்மணி அகாலி தளம் அதிரடி
சுக்பீர் சிங் பாதல்

இந்த சூழ்நிலையில், சிரோன்மணி அகாலி தளத்தின் தலைவரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான சுக்பீர் சிங் பாதல், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து பின்னர் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். நீண்ட காலமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வந்த சிரோன்மணி அகாலி தளம் மத்திய அரசு கொண்டு வந்த விவசாயம் தொடர்பான மசோதாகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்து கட்சி கூட்டத்தில் முடிவு.. சிரோன்மணி அகாலி தளம் அதிரடி
ஹர்சிம்ரத் கவுர் பாதல்

சுக்பீர் சிங் பாதல் நேற்று மக்களவையில் விவசாய மசோதாக்கள் தொடர்பாக பேசுகையில், பஞ்சாபில் விவசாய துறையை கட்டியெழுப்ப அடுத்தடுத்த அரசுகளும், விவசாயிகளும் மேற்கொண்ட 50 ஆண்டு கால கடின உழைப்பை இந்த மசோதாக்கள் அழித்து விடும் என அந்த மசோதாக்களுக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். விவசாயம் தொடர்பான அத்தியாவசிய விளைபொருட்கள் (திருத்த) மசோதா கடந்த செவ்வாய்க்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.