இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் வழக்கு- சுகேஷ் வீட்டிலிருந்து 15 சொகுசு கார்கள் பறிமுதல்

 

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் வழக்கு- சுகேஷ் வீட்டிலிருந்து 15 சொகுசு கார்கள் பறிமுதல்

சென்னை அடுத்த கானத்தூர் சுகேஷ் சந்திரசேகர், லிமா மேரி பால் வீட்டில் மத்திய அமலாக்க துறையினர் சோதனை முடித்து சீல் வைத்தனர்.

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் வழக்கு- சுகேஷ் வீட்டிலிருந்து 15 சொகுசு கார்கள் பறிமுதல்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் நடந்த போது அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இரண்டு அணிகளாக அதிமுக பிளவுபட்டிருந்த நிலையில் சின்னங்கள் தனித்தனியாக ஒதுக்கப்பட்டு பிரச்சாரங்கள் நடைபெற்றன. இதில் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதாக ஆர்கே நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு டிடிவி தினகரன் 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு தொடரப்பட்டது .இதில் தினகரனுக்கு இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் என்பவர் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சம்மந்தப்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் டெல்லியில் உள்ள வீட்டில் சில நாட்களாக மத்திய அமலாக்கத்துறையினர் தொடர்ச்சியாக சோதனை நடந்திவந்தனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் கானத்தூரில் உள்ள சுகேஷ் வீட்டில் நேற்றும் இன்றும் சோதனை செய்த அமலாக்கத்துறையினர், பெராரி சொகுசு கார் உள்ளிட்ட 15 கார்கள், ஒரு சொகுசு பேருந்து மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதன்பின் கார், பேருந்துகளை சிறப்பு வாகனங்கள் மூலமாக கொண்டுசென்றனர். மேலும் அவரது வீட்டிற்கும் அமலாக்கத்துறை சீல் வைத்தனர். நீச்சல் குளம், மதுபான பார், உடற்பயிற்சி கூடம், மிக நவீன படுக்கை அறைகள், உயர் ரக வெளிநாட்டு மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்த சுகேஷின் கானத்தூர் சொகுசு பங்களாவை கண்ட மத்திய அமலாக்கதுறையினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.