`பல லட்சங்கள் சுவாகா; சக காவலர்களே ஏமாற்றினர் !’-உயிரை மாய்த்துக் கொண்ட திருச்சி பெண் காவலர்

 

`பல லட்சங்கள் சுவாகா; சக காவலர்களே ஏமாற்றினர் !’-உயிரை மாய்த்துக் கொண்ட திருச்சி பெண் காவலர்

பல லட்சங்களை கடனாக வாங்கிய சக போலீஸார் ஏமாற்றியதால் வேதனையில் பெண் தலைமைக் காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருச்சியில் காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`பல லட்சங்கள் சுவாகா; சக காவலர்களே ஏமாற்றினர் !’-உயிரை மாய்த்துக் கொண்ட திருச்சி பெண் காவலர்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் காவல்நிலையம் செல்படுகிறது. இந்த காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தவர் பவானி. கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார் பவானி. கடந்த 28ம் தேதி எலிபேஸ்ட்டை குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளார் பவானி. பின்னர் அவராகவே தான் விஷம் குடித்துவிட்டதாக கூறி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார். 30ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் பவானி. இந்த நிலையில், பவானி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறிய அவரது உறவினர்கள், அவரது செல் போனில் விஷம் குடிக்கும் முன்பே வீடியோ பதிவு செய்திருப்பதை கண்டுபிடித்தனர். அந்த வீடியோ தான் தற்போது காவல்துறைக்குள் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

வீடியோவில் பேசியுள்ள பவானி,”எல்லோரையும் போலத் தான் நானும் சிறப்பாக வாழனும், சொத்து சேர்த்து சமூகத்தில் நல்ல நிலைமையில் இருக்கனும்னு நினைச்சேன். அது தவறா. 2013ம் ஆண்டு திருச்சி ஒன் பட்டாலியனில் இருக்கும் உமாவிடம் நான்கு லட்சமும், டெல்லி பட்டாலியனில் இருக்கும் அருள் முருகானந்தத்திடம் நான்கு லட்ச ரூபாய் பணம் கடனாகக் கொடுத்திருக்கிறேன். பணத்தைப் பலமுறை கேட்டேன். அவர்கள் கொடுக்கவில்லை. எனக்குத் தெரிந்தவர்களை வைத்துக்கேட்டால் நீ யாரிடம் வேண்டுமானாலும் சொல்லு நான் வாங்கிய பணத்தைத் தரமுடியாது என்று இருவரும் மிரட்டினார்கள்.

`பல லட்சங்கள் சுவாகா; சக காவலர்களே ஏமாற்றினர் !’-உயிரை மாய்த்துக் கொண்ட திருச்சி பெண் காவலர்

இரண்டு நாட்களாகக் காய்ச்சல், தலைவலி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளதால் தனக்கு கொரோனா வந்துவிட்டதோ? என்ற பயத்தில் என்ன பண்றதுன்னே தெரியவில்லை. எல்லோரும் என்னை ஏமாற்றுகிறார்கள். நான் இருந்து என்ன பயன்” என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

பின்னர் எலிபேஸ்டை குளிர்பானத்தில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் பவானி. இதை அப்படியே வீடியோவாக பேசி வைத்துவிட்டு மருந்தைக் குடித்திருக்கிறார். இந்த வீடியோவை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடன் வாங்கி பணத்தை கொடுக்காமல் மிரட்டிய காவலர்கள் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்த காவலர்கள் முடிவு செய்துள்ளனர்.

வாங்கிய கடனை கொடுக்காமல் சக காவலர்களே ஏமாற்றியதால் பெண் காவலர் விஷம் குடித்து உயிரை மாய்த்திருப்பது காவலர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.