புழல் வாடகை பிரச்னையால் தற்கொலை விவகாரம்! – விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்

புழல் வாடகை பிரச்னையால் தற்கொலை விவகாரம்! – விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்

புழலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அடித்ததால் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த புழல் விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (42).

புழல் வாடகை பிரச்னையால் தற்கொலை விவகாரம்! – விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்

பெயிண்டிங் தொழில் செய்து வந்த இவர் கொரோனா பாதிப்பு காரணமாக வேலையின்றி அவதியுற்று வந்தார். இந்த நிலையில் வாடகை பாக்கி காரணமாக வீட்டைவிட்டு வெளியேற்ற வீட்டு உரிமையாளர் முயன்றார். புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மூலம் வீட்டை காலி செய்ய முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.
விசாரணை நடத்திய புழல் இன்ஸ்பெக்டர், சீனிவாசனை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

புழல் வாடகை பிரச்னையால் தற்கொலை விவகாரம்! – விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்

மனைவியின் கண் முன்பாக இன்ஸ்பெக்டர் ஆபாச வார்த்தைகளால் திட்டியதாலும், அடித்ததாலும் மனமுடைந்த சீனிவாசன் தீக்குளித்தார். மரண வாக்குமூலத்தில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் நடந்து கொண்டது பற்றி புகார் கூறியிருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து புழல் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

புழல் வாடகை பிரச்னையால் தற்கொலை விவகாரம்! – விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்
இது தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து நான்கு வாரத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.