திருச்சி சிறை கைதிகள் விளைவித்த செங்கரும்புகள் தள்ளுபடி விலையில் விற்பனை…

 

திருச்சி சிறை கைதிகள் விளைவித்த செங்கரும்புகள் தள்ளுபடி விலையில் விற்பனை…

திருச்சி

பொங்கல் பண்டிகையை ஒட்டி திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறைக் கைதிகளால் விளைவிக்கப்பட்ட செங்கரும்புகள் விற்பனைக்கு வந்துள்ளன.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கைதிகளை கொண்டு சுமார் 2 ஏக்கரில் செங்கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட இந்த கரும்புகள், பொங்கல் பண்டிகை விற்பனைக்காக அறுவடை செய்யப்பட்டு சிறை வளாகத்தில் உள்ள அங்காடி, திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் பெண்கள் சிறை உள்ளிட்ட 4 இடங்களில் வைக்கப்பட்டு உள்ளது.

திருச்சி சிறை கைதிகள் விளைவித்த செங்கரும்புகள் தள்ளுபடி விலையில் விற்பனை…

வெளிச் சந்தைகளில் கரும்பின் விலை 40 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில், சிறைச் சாலையில் விளைவிக்கப்பட்ட கரும்பு ஒன்றின் விலை 20 ரூபாய் என 10 கரும்புகள் அடங்கிய கட்டு ஒன்று 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், அதிகளவு கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தள்ளுபடி விலையில் கட்டு ஒன்று, 180 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 2 லட்சம் ரூபாய் அளவிற்கு கரும்பு விற்பனை நடைபெற்று உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.