மின்கட்டணம் செலுத்த போதிய கால அவகாசம் வழங்கப்படுகிறது – மின் வாரியம் பதில் மனு

 

மின்கட்டணம் செலுத்த போதிய கால அவகாசம் வழங்கப்படுகிறது – மின் வாரியம் பதில் மனு

கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்குச் செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சார கணக்கீடு செய்யும் போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சார பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையைக் கழித்து விட்டு, மீத தொகைக்கு பில் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்தது. ஆனால் இந்த உத்தரவால் மின்கட்டணம் அதிகமாக வருவதாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர்.

மின்கட்டணம் செலுத்த போதிய கால அவகாசம் வழங்கப்படுகிறது – மின் வாரியம் பதில் மனு

ஊரடங்கு காலத்தில் வீட்டு உபயோக இணைப்புக்கான மின்சார அளவு கணக்கீடு செய்வது குறித்து மின்சார வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் எழுந்தது. அப்போது மனுதாரரின் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மின்வாரியம் சார்பில் பதில் மனு அளிக்கப்பட்டது. அந்த பதில் மனுவில், தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்தக் கால அவகாசம் அவ்வப்போது வழங்கப்படுவதாகவும் அபராதம் ஏதும் விதிக்கப்படுவதில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், முந்தைய மாத அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயிப்பது விதிமீறல் இல்லை என்றும் அவ்வாறு செய்தல் மின்வாரியத்துக்குத் தான் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நீதிபதிகள், மின் அளவிடும் பணியை மேற்கொள்ள முடியவில்லை என்றால் முந்தைய மாத கட்டணத்தை நிர்ணயிக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.