தடுப்பூசி மாற்றி போட்ட விவகாரம்.. குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.. பகுஜன் சமாஜ்

தடுப்பூசி மாற்றி போட்ட விவகாரம்.. குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.. பகுஜன் சமாஜ்

உத்தர பிரதேசத்தில் தடுப்பூசி மாற்றி போட்ட விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் சித்தார்தநகர் மாவட்டத்தில் இந்த மாத தொடக்கத்தில் 20 கிராமத்தினருக்கு இரண்டாவது டோஸாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால் அவர்களுக்கு முன்பு முதல் டோஸ் தடுப்பூசியாக கோவிஷீல்டு போடப்பட்டு இருந்தது. தற்போது தடுப்பூசி மாற்றி போடப்பட்டதால் பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். அதேசமயம் அவர்களுக்கு (தடுப்பூசி மாற்றிபோட்டவர்களுக்கு) உடல் நலத்தில் எந்த புகாரும் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தடுப்பூசி மாற்றி போட்ட விவகாரம்.. குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.. பகுஜன் சமாஜ்
பகுஜன் சமாஜ் கட்சி

தடுப்பூசி மாற்றி போட்ட விவகாரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர் சுதிந்திர படோரியா கூறியதாவது: இது கிரிமினல் அலட்சியம் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். கோவிட்-19 தொற்றுநோயை கையாள்வதில் உத்தரபிரதேச அரசு மீது மாநில மக்கள் வருத்தமடைந்துள்ளனர். எனவே குறைந்தபட்சம் மக்களுக்கு சரியான தடுப்பூசி போட வேண்டும்.

தடுப்பூசி மாற்றி போட்ட விவகாரம்.. குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.. பகுஜன் சமாஜ்
சுதிந்திர படோரியா

கோவிட்-19 நோயாளிகள் படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துக்களுக்காக போராடி கொண்டு இருக்கும் நேரத்தில் கிடைக்கும் தடுப்பூசி முறையாக பயன்படுத்தப்படவில்லை. மாநிலத்தல் கங்கை நதியில் சடலங்கள் மிதந்து கிடந்த சில நாட்களில், அரசாங்கம் இப்போது தடுப்பூசி டோஸ்களை மாற்றி மக்களுக்கு தவறாக போடுகிறது. இது இன்னும் உலகளாவிய விசாரணைக்குரிய ஒரு விஷயமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.