திமுக வேட்பாளர் எ.வ.வேலு வீட்டில் திடீர் ரெய்டு.. ஓ.. இது தான் காரணமா!

 

திமுக வேட்பாளர் எ.வ.வேலு வீட்டில் திடீர் ரெய்டு.. ஓ.. இது தான் காரணமா!

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான 10 இடங்களில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அவரை ஆதரித்து திருவண்ணாமலையில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், இந்த திடீர் ரெய்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக வேட்பாளர் எ.வ.வேலு வீட்டில் திடீர் ரெய்டு.. ஓ.. இது தான் காரணமா!

வேலுவுக்கு சொந்தமான கல்லூரி விடுதி, ஸ்டாலின் தங்கியிருந்த ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக சோதனை நடைபெற்றதாம். வேலு பணப்பட்டுவாடா செய்ததாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு மற்றொரு காரணமும் இருப்பதாக தற்போது தகவல்கள் கசிகின்றன.

அதாவது, திருவண்ணாமலையை சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் பேசிய ஆடியோ ஒன்று அண்மையில் வைரலானது. அதில் வேலு 8 கல்வி நிறுவனங்கள், 6000 ஏக்கர் நிலம், மில், கிரானைட் கம்பெனி எல்லாம் வைத்திருக்கிறார். 500 கோடிக்கு பைனான்ஸ் விடுகிறார். அவருக்கெல்லாம் பணிவிடை செய்ய வேண்டுமா? என அந்த நிர்வாகி ஆவேசமாக பேசியிருந்தார்.

திமுக வேட்பாளர் எ.வ.வேலு வீட்டில் திடீர் ரெய்டு.. ஓ.. இது தான் காரணமா!

இது குறித்து விளக்கமளித்த வேலு, நான் இப்போது வைத்திருக்கும் எல்லாம் திமுகவில் இணைவதற்கு முன்னதாக சம்பாதித்தவை. 6 ஏக்கர் நிலம் எல்லாம் இல்லை. அது தவறான தகவல். எனது அறக்கட்டளை மூலமாக கடன் வாங்கி தான் மருத்துவமனையை கட்டிக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்திருந்தார். இந்த ஆடியோ தான் எ.வ.வேலு வீட்டில் நடந்த திடீர் சோதனைக்கு காரணம் என சொல்லப்படுகிறது.