கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு திடீர் சிக்கல்

 

கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு திடீர் சிக்கல்

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி தமிழகத்தில் போடப்பட்டுவருகிறது. ஆனால் இந்த தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தின் உலக சுகாதார நிறுவனம் அவசர கால பயன்பாடு பட்டியலில் இடம்பெறாததால் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாட்டு பயணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு திடீர் சிக்கல்

அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை மட்டுமே தங்களது நாட்டுக்குள் அனுமதிப்பது என்ற விதிமுறையை உலகின் பல்வேறு நாடுகள் கடைப்பிடித்து வருகின்றன. கோவிஷீல்டு, மாடெர்னா, பைசெர், ஜான்சன், சைடோபார்ம் ஆகிய தடுப்பூசிகளுக்கு மட்டுமே உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. இதனால் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மருந்தை அந்த பட்டியலில் சேர்க்கக்கோரி பாரத் பயோடெக் உலக சுகாதார அமைப்புக்கு விண்ணப்பித்துள்ளது.