கொரோனா புதிய அறிகுறிகள் – திடீரென வாசனை மற்றும் சுவை உணர்வு குறைதல்

 

கொரோனா புதிய அறிகுறிகள் – திடீரென வாசனை மற்றும் சுவை உணர்வு குறைதல்

டெல்லி: கொரோனா நோய்த் தொற்றின் புதிய அறிகுறிகள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகில் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தை பெற்றுள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி இதுவரை நாட்டில் 3,08,993 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றில் 1,45,779 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 8,884 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். நாட்டில் 1,54,330 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா புதிய அறிகுறிகள் – திடீரென வாசனை மற்றும் சுவை உணர்வு குறைதல்

இந்நிலையில், கொரோனா நோய்த் தொற்றின் புதிய அறிகுறிகள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திடீரென வாசனையை நுகரும் உணர்வு குறைந்தாலோ அல்லது சுவை உணர்வு குறைந்தாலோ அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். முன்னதாக கொரோனா நோய்த் தொற்று அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், சோர்வு, மூச்சுத் திணறல், தொண்டை புண் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை கூறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.