செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு திடீரென அதிகரிப்பு!

 

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு திடீரென அதிகரிப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று இரவு முதல் வினாடிக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்படவுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

நிவர் புயல் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது, தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மணிக்கு 110 கி.மீ. முதல் 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. மேலும் கனமழையும் பெய்தது. சென்னையில் நேற்று இரவு பலத்த காற்று வீசியதால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அப்பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு திடீரென அதிகரிப்பு!

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று காலை முதல் நீர் வரத்து குறைந்த காரணத்தால் ஏரியிலிருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஏரியின் நீர் வரத்து சுமார் 3000 கன அடியாக அதிகரித்துள்ளதால் இன்று இரவு முதல் வினாடிக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்படவுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 22.15 அடியை எட்டியுள்ளது. நீரின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாக இருக்கும் நிலையில் நீர் இருப்பு 3159 கன அடியாகவும், நீர்வரத்து 2050 கன அடியாகவும் உள்ளது. ஏரியிலிருந்து விநாடிக்கு 1500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.