கோவையில் பிளாஸ்டிக் கடையில் திடீர் தீ விபத்து… ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்!

 

கோவையில் பிளாஸ்டிக் கடையில் திடீர் தீ விபத்து… ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்!

கோவை

கோவை ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள பிளாஸ்டிக் கடையில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருடகள் எரிந்து சேதமடைந்தன.

கோவையின் முக்கிய வணிக பகுதியான ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள 4 மாடி வணிக வளாகத்தில் சலீம் என்பருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த கடையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியுள்ளது. பின்னர், மளமளவென தீப்பற்றி கடையில் இருந்த பொருட்கள் எரிய தொடங்கின. இதனை கண்ட அந்த பகுதி மக்கள், கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

கோவையில் பிளாஸ்டிக் கடையில் திடீர் தீ விபத்து… ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்!

சம்பவ இடத்திற்கு 2 வாகனங்களில் விரைந்து வந்த 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1.30 மணி நேர போராட்டத்துக்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இரவு கடை பூட்டப்பட்டு இருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

தீ விபத்து குறித்து கடை உரிமையாளர் சலீம் அளித்த புகாரின் பேரில், கடை வீதி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை நகரின் முக்கிய கடைவீதியில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.