‘திடீரென தீப்பற்றி எரிந்த விசைப்படகு’: கடலில் குதித்து உயிர் தப்பிய மீனவர்கள்!

 

‘திடீரென தீப்பற்றி எரிந்த விசைப்படகு’: கடலில் குதித்து உயிர் தப்பிய மீனவர்கள்!

காசிமேடு துறைமுகத்தில் திடீரென விசைப்படகு தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று, பல நாட்கள் கடலிலேயே இருந்து மீன்பிடித்து வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், இன்று 9 மீனவர்கள் கொண்ட 10 நாட்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்தையும் எடுத்துக் கொண்டு விசைப்படகில் புறப்பட்டனர். மீனவர்களுள் ஒருவர், டீசல் இன்ஜினின் செல்ப் மோட்டரை இயக்கியுள்ளார்.

‘திடீரென தீப்பற்றி எரிந்த விசைப்படகு’: கடலில் குதித்து உயிர் தப்பிய மீனவர்கள்!

அப்போது அதிலிருந்து டீசல் பரவியதால், தீ மளமளவென படகு முழுவதிலும் பரவத் தொடங்கியுள்ளது. பதற்றம் அடைந்த மீனவர்கள், உடனே கடலில் எகிறி குதித்ததால் உயிர் தப்பியுள்ளனர். அதன் பிறகு கரையேறிய மீனவர்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விடாது முயன்ற வீரர்கள், போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த திடீர் விபத்தில், ரூ.50 லட்சம் மதிப்பிலான படகு எரிந்து முற்றிலுமாக சேதமடைந்து விட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.