திடீர் விலகல் – பிரசாந்த் கிஷோர் இந்த முடிவை எடுத்தது ஏன்?

 

திடீர் விலகல் – பிரசாந்த் கிஷோர் இந்த முடிவை எடுத்தது ஏன்?

பஞ்சாப் முதல்வரின் தலைமை ஆலோசகர் பொறுப்பில் இருந்து திடீரென்று விலகினார் பிரசாந்த் கிஷோர். இது தொடர்பாக அவர் முன்கூட்டியே கடிதம் எழுதி இருந்தாலும் அதை வாபஸ் பெற்றுவிடுவார் என்றே சொல்லப்பட்டு வந்த நிலையில் அவர் விலகியிருக்கிறார். இதையடுத்து #PrashantKishor என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி இருக்கிறது.

திடீர் விலகல் – பிரசாந்த் கிஷோர் இந்த முடிவை எடுத்தது ஏன்?

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தேர்தல் வியூகம் வல்லுனர் பிரசாந்த் கிஷோரை தனது தலைமை ஆலோசகராக கடந்த மார்ச் மாதம் நியமித்திருந்தார். இதன்பின்னர், பொது வாழ்க்கையில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுக்கும் தனது முடிவின் அடிப்படையில் தலைமை ஆலோசகராக தன்னால் பொறுப்புகளை ஏற்க முடியவில்லை. எதிர்கால செயல்பாடு குறித்து இனிமேல் தான் முடிவு எடுக்க வேண்டும். அதனால் தயவு செய்து இந்த பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று அமரீந்த சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார் பிரசாந்த் கிஷோர்.

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைய இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில்தான் இந்த கடிதத்தை அவர் எழுதியிருந்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிந்தவுடன் பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணைய இருப்பதாகவும், ராகுல்காந்தியும் இதை விரும்புவதாகவும் காங்கிரஸின் மூத்த தலைவர்களும் அதையே விரும்புவதாகவும் தகவல்.

திடீர் விலகல் – பிரசாந்த் கிஷோர் இந்த முடிவை எடுத்தது ஏன்?

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவுதற்காக இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. கட்சியில் தனக்கு தேசிய அளவிலான பதவியை எதிர்பார்த்து இருக்கிறாராம் பிரசாந்த் கிஷோர். இரண்டாவதாக தேர்தல் பிரசார வியூகம் அமைப்பது அனைத்து அரசியல் நடவடிக்கைகளை முடிவு செய்வது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் சிறப்பு ஆலோசனைக் குழு அமைக்க வேண்டும் என்றும், அதில் தான் முக்கிய உறுப்பினராக இருக்கவேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

காங்கிரஸ் தலைமையும் பிரசாந்த் கிஷோர் இந்த இரண்டு கோரிக்கைகளை ஏற்று விரைவில் அவரை காங்கிரஸில் இணைத்துக் கொள்வதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் பஞ்சாப் முதல்வரின் தலைமை ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார். அவர் காங்கிரஸில் இணைய இருப்பதால்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.