‘கையில் அடிபட்ட சிறுமி சிகிச்சையில் திடீர் மரணம்’ – தவறான சிகிச்சையா? அதிர்ச்சி சம்பவம்!

‘கையில் அடிபட்ட சிறுமி சிகிச்சையில் திடீர் மரணம்’ – தவறான சிகிச்சையா? அதிர்ச்சி சம்பவம்!

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியில் வசித்து வரும் தம்பதி ராமகிருஷ்ணன்(30) – திவ்யபாரதி. இவர்களது இரண்டாவது மகள் பிரியதர்ஷினி(3). இவருக்கு கடந்த 30ம் தேதி கையில் அடிபட்டுள்ளது. கழிவறைக்கு சென்ற போது பிரியதர்ஷினி கீழே விழுந்து அடிபட்டதால், கை வீக்கத்துடன் இருந்துள்ளது. சிறுமியை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்ற நிலையில், 2 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவைக்கு செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

‘கையில் அடிபட்ட சிறுமி சிகிச்சையில் திடீர் மரணம்’ – தவறான சிகிச்சையா? அதிர்ச்சி சம்பவம்!

அதன் படி, டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையில் பிரியதர்ஷினியை பெற்றோர் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு நேற்று முன்தினம் மாலை ஆபரேஷன் செய்த நிலையில், இரவு சிறுமி இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கையில் அடிப்பட்ட குழந்தை எப்படி இறக்கும் என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

‘கையில் அடிபட்ட சிறுமி சிகிச்சையில் திடீர் மரணம்’ – தவறான சிகிச்சையா? அதிர்ச்சி சம்பவம்!

தகவல் அறிந்து ராமகிருஷ்ணனின் உறவினர்கள் பலர் மருத்துவமனையில் குவிந்ததால், சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்துள்ளனர். தவறான சிகிச்சையால் தான் சிறுமி உயிரிழந்து விட்டதாக புகார் அளித்துள்ளனர். பின்னர் கோவை மருத்துவமனைக்கு சிறுமியின் உடல் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் முடிந்த பிறகு குழந்தையின் இதயம் வேலை செய்யவில்லை என்றும் நுரையீரல் சுருங்கி இருப்பதாகவும் சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்றும் சிறுமியின் பெற்றோர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.