திடீர் ஊரடங்கு…வாக்கு எண்ணிக்கை எப்போது? தேர்தல் அதிகாரிகள் அவசர ஆலோசனை!

 

திடீர் ஊரடங்கு…வாக்கு எண்ணிக்கை எப்போது? தேர்தல் அதிகாரிகள் அவசர ஆலோசனை!

‘வாக்கு இயந்திரங்கள் மிக பாதுகாப்பாக உள்ளன’ என்று சத்யபிரதா சாகு உறுதிப்பட கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் 42 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர். இந்த சூழலில் ககொரோனா பரவலை கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் 20 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஞாயிற்று கிழமைகளில் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், தியேட்டர்கள் ,வணிக வளாகங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 30ஆம் தேதிவரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் ஊரடங்கு…வாக்கு எண்ணிக்கை எப்போது? தேர்தல் அதிகாரிகள் அவசர ஆலோசனை!

இந்த சூழலில் திடீர் அறிவிப்பால் வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா? மே இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினமும் ஊரடங்கு அமல் படுத்தப்படுமா? போன்ற என்று கேள்விகள் எழுந்தன. ஆனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே இரண்டாம் தேதி முழு உரடங்கு உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் பொருந்தாது என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்தார்.

திடீர் ஊரடங்கு…வாக்கு எண்ணிக்கை எப்போது? தேர்தல் அதிகாரிகள் அவசர ஆலோசனை!

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் ஆலோசனை நடைபெறுகிறது. மே 2ம் தேதி ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “மே 2ஆம் தேதி காலை 8.30 மணிக்கு தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும். சிறிய தொகுதிகளில் 14 மேஜைகள் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.பெரிய தொகுதிகளில் 30 மேஜைகள் வரை கொண்டு வாக்குகள் எண்ணப்படும்.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல்துறை கண்காணிப்பில் மிக பாதுகாப்பாக உள்ளன. இதுவரை எந்த தவறும் நிகழவில்லை.அப்படி புகார் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது .அது ஒரு கால்குலேட்டர் போலதான். வாக்கு எண்ணும் மையத்தில் கண்டெய்னர் வந்தது கழிப்பறை வசதிக்காகத் தான்” என்றார்.