வரைப்படத்தில் திடீர் மாற்றம்..சென்னை கொரோனா பாதிப்பு விவரங்களை மறைக்கிறதா மாநகராட்சி?!

வரைப்படத்தில் திடீர் மாற்றம்..சென்னை கொரோனா பாதிப்பு விவரங்களை மறைக்கிறதா மாநகராட்சி?!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னையில் தான் அதிக அளவு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதனால் தலைநகரான சென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இருப்பினும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. அதனால், சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஊரடங்கை நீடிப்பது தொடர்பாக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே சென்னை பாதிப்பின் விவரங்களைத் தினமும் சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது.

வரைப்படத்தில் திடீர் மாற்றம்..சென்னை கொரோனா பாதிப்பு விவரங்களை மறைக்கிறதா மாநகராட்சி?!

அந்த வகையில் இன்று வெளியிடப்பட்ட சென்னை பாதிப்பு வரைப்படத்தில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, சென்னையின் மொத்த பாதிப்பை வெளியிடாமல் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையை மட்டுமே மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் படி, அண்ணா நகரில் 2,739 பேருக்கும், தேனாம்பேட்டையில் 2,296 பேருக்கும், ராயபுரத்தில் 2,153 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் கொரோனா பாதிப்பு விவரங்களை மாநகராட்சி நிர்வாகம் மறைக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வரைப்படத்தில் திடீர் மாற்றம்..சென்னை கொரோனா பாதிப்பு விவரங்களை மறைக்கிறதா மாநகராட்சி?!