‘எமோஜி கொடுத்து ஹவுஸ்மேட்ஸை உசுப்பேத்தும் சுசித்ரா’ அனல் பறக்கும் புரோமோ!

 

‘எமோஜி கொடுத்து ஹவுஸ்மேட்ஸை உசுப்பேத்தும் சுசித்ரா’ அனல் பறக்கும் புரோமோ!

பிக் பாஸ் சீசன் 4ன் இன்றைய நிகழ்ச்சிக்கான 3ஆவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4ல் அர்ச்சனா எண்ட்ரி கொடுத்தவுடன், பிக்கி கொடுத்த முதல் டாஸ்க் ஹவுஸ்மேட்ஸை உசுப்பேத்துவது. வெளியே போட்டியாளர்கள் எவ்வாறு பிரதிபலிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த நமுத்து போன பட்டாசு, அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட், காணவில்லை, பிபி ட்ரெண்டிங் என பல பெயர் பலகையை கொடுக்க வைத்தார். இது பிக் பாஸ் சீசன் 4ல் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். அன்றில் இருந்து இன்று வரை, அர்ச்சனாவின் குரல் பிக் பாஸ் வீட்டில் ஓங்கியே இருக்கிறது.

‘எமோஜி கொடுத்து ஹவுஸ்மேட்ஸை உசுப்பேத்தும் சுசித்ரா’ அனல் பறக்கும் புரோமோ!

இவ்வாறு இருக்கும் சூழலில், பாடகி சுசித்ராவை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பியிருக்கிறார் பிக்கி. ஏற்கனவே அங்கு சண்டைக்கு பஞ்சம் இல்லாத சூழலில், ஹவுஸ்மேட்ஸை உசுப்பேத்தி விட சுசித்ரா உள்ளே சென்றிருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், சுசித்ரா ஹவுஸ்மேட்ஸின் கேரக்டரை குறிக்கும் எமோஜியை கொடுப்பது போல பதற்போது புரோமோ வெளியாகியுள்ளது.

‘எமோஜி கொடுத்து ஹவுஸ்மேட்ஸை உசுப்பேத்தும் சுசித்ரா’ அனல் பறக்கும் புரோமோ!

அதில், ‘ முதலில் காயப்பட்டவர் போல இருப்பதாக சுரேஷ் சக்கரவர்த்திக்கும், அவர் தேடல் என்னவென்று புரியவே இல்லை என ரியோவுக்கும், வாக்குவாதத்துக்கு பதிலே தெரியல என ஷிவானிக்கும், ஹவுஸ்மேட்ஸ் சொல்ல வருவதை தடுப்பதாக அர்ச்சனாவுக்கும் எமோஜி கொடுக்கிறார்.

‘எமோஜி கொடுத்து ஹவுஸ்மேட்ஸை உசுப்பேத்தும் சுசித்ரா’ அனல் பறக்கும் புரோமோ!

தொடர்ந்து, சத்தியமாக இதனை யாரையும் புண்படுத்த சொல்லவில்லை என சுசித்ரா கூறுவது போல புரோமோ முடிகிறது. மறுபடியும் முதலில் இருந்தா?… சுஜி லீக்ஸ்ச தூக்கி விஜய் லீக்ஸ்ல போட்ருக்காங்க என நெட்டிசன்கள் கமெண்ட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.