கிரிக்கெட் அணியின் புது ஜெர்ஸிக்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

 

கிரிக்கெட் அணியின் புது ஜெர்ஸிக்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

ஆஸ்திரேலிய அணியோடு இந்தியா மோதும் தொடர் விரைவில் தொடங்க விருக்கிறது. நவம்பர் 27 – லிருந்து டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகைகளிலும் ஆட விருக்கின்றன இரு அணிகளும். டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகைகளிலும் ஆட விருக்கின்றன.

இதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டி20 போட்டிகளுக்காக பிரத்யேகமான ஒரு ஜெர்ஸியை தயார் செய்திருக்கிறது. அதில், ஆஸ்திரேலியாவின் சிறப்புகளைச் சொல்வதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கிரிக்கெட் அணியின் புது ஜெர்ஸிக்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

1868 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா – இங்லாந்து கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதுதான் ஆஸ்திரேலியா வெளிநாட்டில் அதுவும் கடல் கடந்த முதல் கிரிக்கெட் தொடர் அதைக் குறிப்பதாகவும் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் அந்நாட்டின் வளம், ஒற்றுமை உள்ளிட்ட சிறப்புகளை விளக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்திய அணிக்கும் டி20 போட்டியில் விளையாட சூப்பரான ஜெர்ஸியை வடிவமைத்திருக்கிறார்கள். அதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா? 1992-ம் ஆண்டு உலககோப்பைக்கு ஆடிய இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியின் டிஸைன் அப்படியே உள்ளது.

கிரிக்கெட் அணியின் புது ஜெர்ஸிக்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

1992 ஆம் ஆண்டு நடந்த உலககோப்பை இந்திய கிரிக்கெட் அணி முகம்மது அஸாரூதீன் தலைமையில் சென்றது. அந்த அணியில் பிரவின் அம்ரே, வினோத் காம்ப்ளி, அஜய் ஜடேஜா, கபில் தேவ், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கிரண் மோரே, மனோஜ் பிரபாகர், ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், ஸ்ரீகாந்த், ஸ்ரீநாத் உள்ளிட்டோரும் இடம்பெற்றிந்தனர். அந்த ஆண்டில் கோப்பையை வெல்ல முடியவில்லை என்றாலும் சிறப்பான அணியாக அது மதிப்பிட பட்டது. அதை நினைவூட்டும் விதமாகக் கூட இந்த ஜெர்ஸி வடிமைக்கப்பட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.