பசு மாட்டின் உடலில் உதய சூரியன் சின்னம்?! கொடூர செயலில் ஈடுப்பட்டவர்களை கைது செய்ய நடிகை காயத்ரி ரகுராம் கோரிக்கை!

 

பசு மாட்டின் உடலில் உதய சூரியன் சின்னம்?! கொடூர செயலில் ஈடுப்பட்டவர்களை கைது செய்ய நடிகை காயத்ரி ரகுராம் கோரிக்கை!

கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் திமுகவின் அசைக்க முடியாத முகமாக திகழும் முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமியின் ஆதரவாளர் ஒருவர் பசுவின் உடலில் அவரின் பெயர் மற்றும் உதய சூரியன் சின்னத்தை சூடு போட்டது போல அச்சிட்ட ஒரு புகைப்படம் வைரலாகி வந்தது. இருப்பினும் இதில் உள்ள உண்மை தன்மை குறித்த தெளிவான விவரம் எதுவும் தெரியவில்லை.

பசு மாட்டின் உடலில் உதய சூரியன் சின்னம்?! கொடூர செயலில் ஈடுப்பட்டவர்களை கைது செய்ய நடிகை காயத்ரி ரகுராம் கோரிக்கை!

இதை கண்ட நடிகையும் பாஜகவின் கலை, கலாச்சார பிரிவு தலைவருமான காயத்ரி ரகுராம், ” இது மனிதாபிமானமற்ற செயல். நிச்சயமாக மாடு சித்திரவதை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய நபர்களை கைது செய்து தண்டிக்க வேண்டும்” என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார். ஆனால் இதை கண்ட நெட்டிசன்ஸ் சிலர் கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

https://twitter.com/gayathriraguram/status/1291937796089757696

சார்லி சாப்ளின், விசில் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்த நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் நடந்து கொண்ட விதத்தால் மக்களின் அதிருப்தியை அதிகளவில் சம்பாதித்தார். பின்னர் பாஜகவுக்கு ஆதரவாக பேசி வந்த இவருக்கு தற்போது அக்கட்சியின் கலை, கலாச்சார பிரிவு தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.