மீன் வளர்க்கும் திட்டங்களில் சேர்ந்தால் மானியம்!

 

மீன் வளர்க்கும் திட்டங்களில் சேர்ந்தால் மானியம்!

மீன் வளர்க்கும் திட்டங்களில் சேர்ந்தால் மானியம் அளிக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மீன் வளர்க்கும் திட்டங்களில் சேர்ந்தால் மானியம்!

கொரோனா பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மத்திய அரசின் அதிக வருமானம் ஈட்டக்கூடிய மீன் வளர்ப்பு திட்டங்களில் சேர்வதற்கு மானியம் அளிக்கப்படும். பொதுப்பிரிவினருக்கு 40%, மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவில் 60% சதவீதம் மானியம் அளிக்கப்படும் என்றும் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மீன் வளர்க்கும் திட்டங்களில் சேர்ந்தால் மானியம்!

முன்னதாக நேற்று மீனவர்களுக்கான சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தில் தளர்வு அறிவிக்கப்பட்டது. வெளி மாநிலம் சென்று மூன்று ஆண்டுகளுக்குள் சொந்த ஊர் திரும்பும் மீனவர்கள் மெய்த்தன்மை சான்று இன்றி திட்டத்தில் மீனவர்கள் சேரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.