”தமிழக மீனவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் திட்டம் !” – இந்தியன் வங்கி அறிமுகம்

”தமிழக மீனவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் திட்டம் !” – இந்தியன் வங்கி அறிமுகம்

தமிழகத்தில் உள்ள மீனவர்களுக்கு மானியத்துடன் கூடிய வட்டி கொண்ட புதிய கிசான் கிரெடிட் கார்டு கடன் திட்டத்தை இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.

”தமிழக மீனவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் திட்டம் !” – இந்தியன் வங்கி அறிமுகம்

இது தொடர்பாக இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த புதிய கடன் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள மீனவர்கள், 2 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம் என இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. இந்த கடன் தொகைக்கு வட்டி மானியம் வழங்குவதாகவும் அது அறிவித்துள்ளது.

”தமிழக மீனவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் திட்டம் !” – இந்தியன் வங்கி அறிமுகம்

அதாவது, கடன் தொகைக்கு 7 சதவீத வட்டி விதிக்கப்படுவதாகவும், அதே சமயம் அந்த கடனை, ஒரு ஆண்டிற்குள் திருப்பி செலுத்துவோருக்கு 3 சதவீதம் வட்டி மானியம் வழங்குவதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. மத்திய அரசின் முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த கடன் திட்டத்தில், கடன் வாங்கும் தமிழக மீனவர்களுக்கு ரூபே கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”தமிழக மீனவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் திட்டம் !” – இந்தியன் வங்கி அறிமுகம்

இந்த கடனை பெற விரும்பும் தமிழக மீனவர்கள், அதற்கான விண்ணப்பத்தை தமிழக மீன்வள துறையின் மூலம் சமர்பிக்க வேண்டும் என்றும் அத்துடன், விசைப்படகு குறித்த தகவலையும் குறிப்பிட்டு கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்தியன் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

-எஸ். முத்துக்குமார்