இதுதான் நேரம்.. இந்திய மண்ணில் சீனாவை தூண்டப்படாத ஆக்கிரமிப்பாளராக அறிவியுங்க மோடி ஜி.. சுப்பிரமணியன் சுவாமி

இதுதான் நேரம்.. இந்திய மண்ணில் சீனாவை தூண்டப்படாத ஆக்கிரமிப்பாளராக அறிவியுங்க மோடி ஜி.. சுப்பிரமணியன் சுவாமி

இதுதான் சரியான நேரம், இந்திய மண்ணில் சீனாவை தூண்டப்படாத ஆக்கிரமிப்பாளராக அறிவியுங்க என்று பிரதமர் மோடியை சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீன ராணுவம் தொடர்ந்து ஆக்கிரமிப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததால் இருநாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவியது. சீன ராணுவம் எல்லையில் படைகளை குவித்ததால், பதிலுக்கு நமது ராணுவமும் எல்லையில் படைகளை குவித்தது. இதனையடுத்து பதற்றத்தை தணிக்க எல்லைகளில் குவிக்கப்பட்ட படைகளை திரும்ப இருநாட்டு ராணுவமும் ஒப்புக்கொண்டது. இரு நாடுகளும் படைகளை பின்வாங்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் எல்லையில் பதற்றம் தணிந்தது.

இதுதான் நேரம்.. இந்திய மண்ணில் சீனாவை தூண்டப்படாத ஆக்கிரமிப்பாளராக அறிவியுங்க மோடி ஜி.. சுப்பிரமணியன் சுவாமி
சீன ராணுவம்

இந்த சூழ்நிலையில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி டிவிட்டரில், பிரதமர் மோடி இப்போது இந்திய மண்ணில் சீனாவை ஒரு தூண்டப்படாத ஆக்கிரமிப்பாளராக, வெளிப்படையாகவும், தெளிவாகவும் அறிவிக்க வேண்டிய சரியான நேரம் இது என்று பதிவு செய்து இருந்தார்.

இதுதான் நேரம்.. இந்திய மண்ணில் சீனாவை தூண்டப்படாத ஆக்கிரமிப்பாளராக அறிவியுங்க மோடி ஜி.. சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

கடந்த சில தினங்களுக்கு ராணுவ தளபதி எம்.எம். நரவனேவின் அறிக்கை குறிப்பிட்டு, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் ஆக்கிரமித்த லடாக் பிரதேசத்தில் சீன துருப்புகள் எங்கிருந்தும் பின்வாங்கவில்லை என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்து இருந்தார்.