தடுப்பூசி சந்தோஷத்தில் சீன ஊடுருவலை மறந்து விடாதீங்க… பா.ஜ.க.வை எச்சரித்த சுப்பிரமணியன் சுவாமி

 

தடுப்பூசி சந்தோஷத்தில் சீன ஊடுருவலை மறந்து விடாதீங்க… பா.ஜ.க.வை எச்சரித்த சுப்பிரமணியன் சுவாமி

கோவிட் தடுப்பூசி சந்தோஷத்தில் சீன ஊடுருவலை மறந்து விடாதீங்க என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி மறைமுகமாக எச்சரிக்கை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் கொரோனா வைரசுக்கு எப்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என்று ஏக்கத்தில் இருந்தனர். இந்நிலையில், நம் நாட்டில் அவசர காலத்துக்கு பயன்படுத்திக்கொள்ள கோவிஷீல்ட், கோவாக்ஸின் ஆகிய மருந்துகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மத்திய அரசும், பொதுமக்களும் சந்தோஷத்தில் உள்ளனர். இந்த சூழ்நிலையில், கொரோனா தடுப்பூசி சந்தோஷத்தில் பொருளாதார வீழ்ச்சியையும், சீன ஊடுருவலையும் மறந்து விடாதீங்க மத்திய பா.ஜ.க. அரசுக்கு அந்த கட்சியின் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை செய்துள்ளார்.

தடுப்பூசி சந்தோஷத்தில் சீன ஊடுருவலை மறந்து விடாதீங்க… பா.ஜ.க.வை எச்சரித்த சுப்பிரமணியன் சுவாமி
பிரதமர் மோடி

பா.ஜ.க. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி இது தொடர்பாக டிவிட்டரில், தடுப்பூசியின் இந்த உற்சாகங்கள் அனைத்திலும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதையும், லடாக்கில் குறைந்தபட்சம் 4 ஆயிரம் சதுர கி.மீட்டர் முன்னேறுவதையும் மறந்து விடக்கூடாது என்று பதிவு செய்துள்ளார். நேற்று மற்றொரு டிவிட்டில், குடியரசு தின அணிவகுப்பை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தடுப்பூசி சந்தோஷத்தில் சீன ஊடுருவலை மறந்து விடாதீங்க… பா.ஜ.க.வை எச்சரித்த சுப்பிரமணியன் சுவாமி
குடியரசு தின அணிவகுப்பு (கோப்புப்படம்)

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸால் சாமானிய மக்களின் வாழ்க்கை அடியோடு மாறி விட்டது. அமலில் இருந்த லாக்டவுனால் பல கோடி தொழிலாளர்கள் வேலை இழந்தனா், உற்பத்தி மற்றும் தயாரிப்புகள் நின்றது போன்ற காரணங்களால் நம் நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத அளவுக்கு சரிவு கண்டது. கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறி நுழைந்தது. இதனால்
எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியா-சீனா இடையே போர் பதற்றம் நிலவுகிறது.