பா.ஜ.க. இந்தியாவை இந்து நாடாக மாற்றவில்லை… சுப்பிரமணியன் சுவாமி

 

பா.ஜ.க. இந்தியாவை இந்து நாடாக மாற்றவில்லை… சுப்பிரமணியன் சுவாமி

பா.ஜ.க. இந்தியாவை இந்து நாடாக மாற்றவில்லை என்றும் அதனை அரசியலமைப்பும் தடை செய்கிறது என பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

வெளிநாட்டு நிருபவர்கள் கிளப் ஏற்பாடு செய்து இருந்த வெபினாரில் சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: பா.ஜ.க. இந்தியாவை இந்து நாடாக மாற்றவில்லை. இந்திய அரசியலமைப்பும் அதனை தடை செய்கிறது. பல ஆண்டுகளாக இந்துக்களை பிளவுபடுத்தவும், சிறுபான்மையினரை ஒன்றிணைக்கவும் காங்கிரசால் முடிந்தது. இதனால் ஒவ்வொரு முறையும் எளிதாக அரசாங்கங்களை உருவாக்க முடிந்தது. ஆரியர்கள், திராவிடர்கள், சாதி மற்றும் பல போலி வரலாற்று கருத்துக்களின் அடிப்படையில் காங்கிரசால் இந்துக்கள் பிளவுப்படுத்தப்பட்டனர்.

பா.ஜ.க. இந்தியாவை இந்து நாடாக மாற்றவில்லை… சுப்பிரமணியன் சுவாமி
பா.ஜ.க.

இந்துத்துவ சித்தாந்தத்தின் காரணமாக பா.ஜ.க.வின் வாக்கு பங்கு உயர்ந்துள்ளது. இந்துத்துவ சித்தாந்தம் அப்படியே இருந்தால், பொருளாதார செயல்திறன் என்னவாக இருந்தாலும், அது மோசமான நிலைக்கு செல்லாவிட்டால் ஒவ்வொரு முறையும் தேர்தல்களில் வெற்றி பெறுவோம். அரசியல் ரீதியாக, சாதி, பிராந்தியம் அல்லது மொழி அடிப்படையில் இந்துக்கள் தங்களை பிளவுபடுத்திக் கொள்ள கூடாது என தெரிவித்தார்.

பா.ஜ.க. இந்தியாவை இந்து நாடாக மாற்றவில்லை… சுப்பிரமணியன் சுவாமி
அசாதுதீன் ஓவைசி

அந்த வெபினாரில் கலந்து கொண்ட அசாதுதீன் ஓவைசி கூறுகையில், சுப்பிரமணியன் சுவாமி தனது இந்துத்துவ சித்தாந்தத்தை பொறுத்தவரை, இந்த சித்தாந்தத்தை நம்பும் மக்களை பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ளார், இந்துக்கள் கூட அல்ல. பெரும்பான்மை மதம் மற்ற மதங்களை விட முதன்மையானது மற்றும் அந்த மதத்திற்கு அடிபணியாத மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்படுவார்கள் என்று இந்துத்துவா சித்தாந்தம் தெளிவாக கூறுகிறது என அவர் தெரிவித்தார்.