• February
    19
    Wednesday

Main Area

Main



'சசிகலா ஜெயிலில் இருந்து வரட்டும் அப்புறம்...' : சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு பேச்சு!

 சுப்பிரமணியன் சுவாமி
 சுப்பிரமணியன் சுவாமி

சட்டத்தின் அடிப்படையில் என்கவுண்டர் தவறு என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

subbu

பாஜக மூத்த தலைவர்  சுப்பிரமணியன் சுவாமி சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்திய தண்டனைச் சட்டத்தின் அடிப்படையில் என்கவுண்டர் தவறு. குற்றவாளிகள் போலீசாரை தாக்க  வந்ததாகக்  கூறியுள்ளனர். இதனால் இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை வேண்டும்' என்றார். 

ttn

தொடர்ந்து பேசிய அவர், வெங்காய விலை உயர்வு என்பது நம்முடைய தோல்வி தான். ஏற்கனவே மக்கள் கையில் பணம் இல்லை. நான் நிறைய பொருளாதாரம் சார்ந்த புத்தகங்களை எழுதி வருகிறேன். அது அதிகமாக விற்பனையாகி வருகிறது.

ttn

ஆனால்  நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே...' என்று கூறிய அவர், அதிமுகவை வழிநடத்தும் திறமை சசிகலாவுக்கு உண்டு.  அவர் தண்டனை காலம் முடிந்து வெளியில் வந்த பிறகு அதற்கான வாய்ப்பு அவருக்கு நிறைய உள்ளது. அப்போது என்ன நடக்குதுன்னு பாருங்க' என்றார். 

2018 TopTamilNews. All rights reserved.