“எடியூரப்பா இல்லைனா நீங்க ஆட்சிய பிடிச்சிருக்கவே முடியாது” – பாஜகவை எச்சரிக்கும் சுப்பிரமணியன் சுவாமி!

 

“எடியூரப்பா இல்லைனா நீங்க ஆட்சிய பிடிச்சிருக்கவே முடியாது” – பாஜகவை எச்சரிக்கும் சுப்பிரமணியன் சுவாமி!

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு வயது (78) முதிர்வு ஏற்பட்டதாலும், ஆட்சியில் அவரது மகன் விஜயேந்திராவின் தலையீட்டாலும் பாஜக அமைச்சகளும் எம்எல்ஏக்களும் அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர். அவருக்கு பதிலாக வேறு ஒருவரை முதலமைச்சராக்க வேண்டும் எனக் கூறி எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பினர். அமைச்சர்களில் சிலர் எடியூரப்பாவை வெளிப்படையாகவே ஊடகங்களில் அவரை விமர்சிக்கின்றனர்.

“எடியூரப்பா இல்லைனா நீங்க ஆட்சிய பிடிச்சிருக்கவே முடியாது” – பாஜகவை எச்சரிக்கும் சுப்பிரமணியன் சுவாமி!

இதனிடையே பதவிக்குப் பங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக மகனுடன் டெல்லி விரைந்தார் எடியூரப்பா. அங்கு சென்ற அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அத்துடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரையும் சந்தித்தார். சந்திப்பிற்குப் பின் ராஜினாமா செய்வதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று கூறி திட்டவட்டமாக மறுத்திருந்தார். இச்சூழலில் நேற்று முன்தினம் லிங்காயத் மடாதிபதிகளை சந்தித்து அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி நகர்ந்தார்.

“எடியூரப்பா இல்லைனா நீங்க ஆட்சிய பிடிச்சிருக்கவே முடியாது” – பாஜகவை எச்சரிக்கும் சுப்பிரமணியன் சுவாமி!

மடாதிபதிகளுடன் தனக்கு இருக்கும் ஆதரவை வலுப்படுத்திக் கொள்ள இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. அவரின் இந்நகரவு தன்னை பதவியிலிருந்து தூக்க ஸ்கெட்ச் போட்ட ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைமைக்கு மறைகமுக விடுத்த சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மாநிலத்தின் மக்கள்தொகையில் 16 சதவீதம் பேர் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தாம். பாஜகவுக்கு பெரியளவில் ஆதரவு இச்சமூகத்தில் இருக்கிறது. ஆகவே அதே சமூகத்தைச் சேர்ந்த தனக்கு மதத் தலைவர்களின் ஆதரவு இருப்பதாக டெல்லி தலைமைக்கு சிக்னல் கொடுத்திருக்கிறார்.

இச்சந்திப்பிற்குப் பின் பேசிய மடாதிபதிகள், எடியூரப்பாவை முதலமைச்சர் பதவியிலிருந்து தூக்கினால் பாஜக கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என பாஜக தலைமைக்கு எச்சரிக்கை விடுத்தனர். தற்போது இதே கருத்தை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழிமொழிந்திருக்கிறார். அவரது ட்வீட்டில், “கர்நாடகாவில் பாஜக அதிகாரத்துக்கு வந்தது எடியூரப்பாவால்தான். ஆனால் அவரை நீக்க சதி நடக்கிறது. அவர் இல்லாமல் மாநிலத்தில் பாஜக மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. அவர் பாஜகவுக்கு மீண்டும் திரும்பிவந்த பின்னர் தான் வெற்றிபெற முடிந்தது. ஏன் மறுபடியும் அதே தவறைச் செய்கிறீர்கள்?” என்று பதிவிட்டுள்ளார்.