• December
    13
    Friday

Main Area

Main



வைகோ எம்பி பதவிக்கு தகுதியானவர்தானா என்பதை ஆராயுங்கள்: சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தல்!

சுப்ரமணியன் சுவாமி
சுப்ரமணியன் சுவாமி

புதுடெல்லி:  மாநிலங்களவை எம்பியாக வைகோ தகுதியானவரா ஆராய வேண்டும் என்று  துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார். 

vaiko

தேசத் துரோக வழக்கு வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த தண்டனை ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திமுக சார்பில் வழங்கப்பட்ட வாய்ப்பின் அடிப்படையில் வைகோ மாநிலங்களவை எம்பியாகிறார்.  அவரின் மனு ஏற்கப்படுமா? என்ற சந்தேகம் இருந்த நிலையில், அவரது மனு ஏற்பட்டு விட்டது. இதன் மூலம் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் மாநிலங்களவையில் நுழையவுள்ளார்.

 

இந்நிலையில், வைகோ மாநிலங்களவை எம்.பி ஆவது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, வி.கோபால் சாமி என்ற வைகோ ஒரு கிறிஸ்துவர். கொல்லப்பட்ட எல்.டி.டி.இ அமைப்பின் தலைவரின் குழப்பமான கருத்தியல் மீது உடன்பாடு கொண்டவர். மிஷனரி கொள்கை உடைய இவர் மாநிலங்களவைக்குள் நுழைந்தால் அது இந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைச் சீர்குலைக்கும் என்று கடுமையாக விமர்சித்தார். 

letter

இதைத் தொடர்ந்து  வெங்கைய்யாவுக்கு சுப்ரமணியன் சுவாமி கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில், 'இந்தி ஒரு வளர்ச்சி அடையாத மொழி என்று கூறியவர் வைகோ. இந்தப் பேச்சு அனைத்து இந்தியர்களுக்கும் அவமானம். அதேபோல், நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதேபோல், சமஸ்கிருதம் ஒரு வழக்கொழிந்த மொழி எனவும் அதனை கற்பதில் எவ்வித பயனும் இல்லை எனவும் கூறியுள்ளார். இதனால் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்புக்கு வைகோ தகுதியானவர்தானா என்பதை ஆய்வு செய்ய மாநிலங்களவை ஒழுங்குக் குழுவுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

ஏற்கனவே வைகோவுக்கு எம்பி பதவி வழங்கக் கூடாது என்று  சசிகலா புஷ்பா  வெங்கய்யா நாயுடுக்கு எழுதியது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.