சுஷாந்த் மரண வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு! எனது பொறுப்பை நிறைவேற்றிவிட்டேனா? சுப்பிரமணியன் சுவாமி

சுஷாந்த் மரண வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு! எனது பொறுப்பை நிறைவேற்றிவிட்டேனா? சுப்பிரமணியன் சுவாமி

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது இந்திய திரைப்பட உலகில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கான காரணம் குறித்து மகாராஷ்டிரா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தந்தை பாட்னா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், நேற்று முன்தினம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து பீகார் அரசு சி.பி.ஐ. விசாரிக்க பரிந்துரை செய்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியது.

சுஷாந்த் மரண வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு! எனது பொறுப்பை நிறைவேற்றிவிட்டேனா? சுப்பிரமணியன் சுவாமி

இந்நிலையில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்ககோரிய பீகாரின் அரசின் பரிந்துரை மத்திய அரசு ஏற்றுள்ளதாக தாக்கல் செய்தார். பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

சுஷாந்த் மரண வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு! எனது பொறுப்பை நிறைவேற்றிவிட்டேனா? சுப்பிரமணியன் சுவாமி

தற்போது நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறித்து சுப்பிரமணியன் சுவாமி டிவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்து இருந்தார். சுப்பிரமணியன் சுவாமி டிவிட்டரில், சுஷாந்த் வழக்கை சி.பி.ஐ.விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நான் எனது பொறுப்பை நிறைவு செய்துவிட்டேனா மற்றும் நான் சுதந்திரமாக செல்லலாமா? என பதிவு செய்து இருந்தார்.