பத்திரப்பதிவுக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்ற, சார் பதிவாளர் கைது!

 

பத்திரப்பதிவுக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்ற, சார் பதிவாளர் கைது!

கன்னியாகுமரி

குமரி அருகே நிலத்தை பத்திரப்பதிவு செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார் பதிவாளரை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மேலகாட்டு விளையை சேர்ந்தவர் கிருஷ்ணஜோதி. இவர் நிண்டகரை கிராமத்தில் உள்ள தனது நிலத்தினை பதிவு செய்வதற்காக கணபதிபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகினார். அப்போது, நிலத்தை பத்திரப்பதிவு செய்ய 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்கும்படி, சார் பதிவாளர் பனிமலர் ஜெசிங்டன் கேட்டதாக கூறப்படுகிறது.

பத்திரப்பதிவுக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்ற, சார் பதிவாளர் கைது!

லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இதுகுறித்து குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மதியழகன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பனிமலர் ஜெசிங்டனிடம் வழங்கும்படி அறிவுறுத்தினர்.

அதன்படி, நேற்று கணபதிபுரம் அலுவலகத்தில் கிருஷ்ணஜோதி 50 ஆயிரம் பணத்தை பனிமலர் ஜெசிங்டனிடம் வழங்கினார். அப்போது, அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும், களவுமாக அவரை கைது செய்தனர். தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, சார் பதிவாளரிடம் விசாரித்து வருகின்றனர்.