விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய எஸ்.ஐ தற்கொலை

 

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய எஸ்.ஐ தற்கொலை

சென்னை தியாகராய நகரில் ஆயுதப்படை எஸ். ஐ துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்டார்.

விஸ்வ இந்து பரிஷத், (VHP) அமைப்பின் தமிழ்நாடு தலைவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்த சென்னை, ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர்  சேகர்(47), தி.நகர் பகுதியில் உள்ள விஸ்வ இந்து பரிஷத் அலுவலகத்தின் ஓய்வு அறையில் இன்று மாலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவயிடத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சேகர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தான் வீடு கட்டுவதற்காக ரூ.25 லட்சம் கடன் வாங்கியதாகவும், பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் போய்விடுமோ என மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவருகிறது.

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய எஸ்.ஐ தற்கொலை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாம்பலம் காவல் நிலைய போலீஸார் உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேலூர், காட்பாடியைச் சேர்ந்த சேகர் 1994-ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி படிப்படியாக பதவி உயர்வு பெற்ற அவர் 2007-ல் எஸ்.எஸ்.ஐயாக பதவி உயர்வு பெற்றவர், 2009 முதல் எஸ்.ஐயாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி சங்கீதா என்கிற மனைவியும், 11 வயதில் மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர்.