“போனால் போகட்டும் போடா..”பிளாட்பாரத்தில் படுத்து தூங்கி,பிச்சைக்காரர் போல் வாழும் சப்-இன்ஸ்பெக்டர்

 

“போனால் போகட்டும் போடா..”பிளாட்பாரத்தில் படுத்து தூங்கி,பிச்சைக்காரர் போல் வாழும் சப்-இன்ஸ்பெக்டர்

“இந்த உலகமே போலி உலகம்.ஒருத்தன்கிட்டேயும் அன்போ, பாசமோ கிடையாது. எல்லாவனும் ஏமாத்துக்காரங்க.. இவங்க கூட வாழுறத விட பிச்சைக்காரானா வாழ்றதுல எவ்வளவோ சந்தோசம் இருக்கு. நான்ன் சப் இன்ஸ்பெக்டரா இருந்ததை விடவும் இப்பதான் நிம்மதியா வாழுறேன். எனக்கு அரசாங்க ஓய்வூதியமே வேண்டாம்.. போங்கடா” என்று எந்த நேரமும் தண்னியடித்தபடி ரோடு ரோடாக பிச்சைக்காரன் கோலத்தில் உல்லாசமாக அலைகிறார் ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர்.

“போனால் போகட்டும் போடா..”பிளாட்பாரத்தில் படுத்து தூங்கி,பிச்சைக்காரர் போல் வாழும் சப்-இன்ஸ்பெக்டர்


அவரது பெயர் மதுசூதன் ராவ். கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி டவுன் போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மதுசூதன்ராவ், மனைவியுடன் தனது மூத்த மகன் வீட்டில் வசித்து வந்தார்.இந்த நிலையில்கடந்த 2011-ம் ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார் அவருக்கு மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் கிடைத்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுசூதனின் மனைவி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.இந்த துக்கம் தாங்காமல் மதுசூதன் ராவ் தினமும் மதுகுடிக்கத் தொடங்கினார். இதானல் அவரது மகனுக்கும் மதுசூதன ராவ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டு, மதுசூதன் ராவை, அவரது மகன் வீட்டில் இருந்து வெளியே துரத்தியடித்து விட்டார்.
இதனால் மனம் உடைந்த மதுசூதன் ராவ் கடந்த சில மாதங்களாக சிந்தாமணி வீதிகளில் உள்ள பிளாட் பாரங்களில் படுத்து தூங்கி வருகிறார். தற்போது அவர் வீதி, வீதியாக பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பழைய பாட்டில்களை சேகரித்து சேகரித்து அவற்றை விற்று தினமும் நன்றாகச் சாப்பிடவும் இரவில் தேவையான அளவிற்கு குடித்தும் வருகிறார்.

“போனால் போகட்டும் போடா..”பிளாட்பாரத்தில் படுத்து தூங்கி,பிச்சைக்காரர் போல் வாழும் சப்-இன்ஸ்பெக்டர்


அவரது வங்கி கணக்கில் ஓய்வூதியத் தொகை லட்சத்தை தாண்டிய போதிலும் அதிலிருந்து ஒரு பைசா கூட அவர் இன்னமும் எடுக்கவில்லை. அதுமட்டுமல்ல இந்த விஷயம் கேள்விப்பட்டு அங்குள்ள போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் தேவையான வசதிகளை செய்துகொடுக்க உத்தரவிட்டும் “எனக்கு அதெல்லாம் தேவையில்லை. இந்த வாழ்க்கைதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது. இதையும் வந்து கெடுத்து விடாதீர்கள். நான் விருப்ப ஒய்வு பெற்றதே இத்தகைய மன நிம்மதிக்குத்தான்”என்று கூறியிருக்கிறார்.

மனநிம்மதிக்காக தான் போலீஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். இந்த வாழ்க்கையே எனக்கு போதும் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.