சு.வெங்கடேசன் எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு!

 

சு.வெங்கடேசன் எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கின் போது குறைவாக இருந்த கொரோனா பரவல் தற்போது பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த கொரோனா வைரஸால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சு.வெங்கடேசன் எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு!

இந்நிலையில் சு.வெங்கடேசன் எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர், தோப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இன்று எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமுடன் உள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.