“மத்திய அரசை நோக்கி நீளும் சுட்டு விரல்” – பெகாசஸ் குறித்து ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்மொழிந்த சு.வெங்கடேசன் எம்பி!

“மத்திய அரசை நோக்கி நீளும் சுட்டு விரல்” – பெகாசஸ் குறித்து ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்மொழிந்த சு.வெங்கடேசன் எம்பி!

பெகாசஸ் என்ற மென்பொருள் இன்று இந்தியாவையே புரட்டி போட்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்தளவிற்கு இந்தியர்களின் தரவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மத்திய அரசின் கயமைத்தனம் வெட்டவெளிச்சமாகி இருப்பதாக எதிர்க்கட்சிகள் கொந்தளித்து வருகின்றன. இஸ்ரேலைச் சேர்ந்த பெகாசஸ் எனும் ஸ்பைவேர் மூலம் இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்களின் போன்களை ஹேக் செய்து, அவர்களின் போன் கால்களை ஒட்டு கேட்கும் வேலை படுஜோராக அரங்கேறியிருக்கிறது.

“மத்திய அரசை நோக்கி நீளும் சுட்டு விரல்” – பெகாசஸ் குறித்து ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்மொழிந்த சு.வெங்கடேசன் எம்பி!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர், மத்திய ஐடி அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜல்சக்தி துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அவரின் உறவினர்கள் உள்ளிட்டோர் பெகாசஸால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் உள்ளனர். இவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன.

“மத்திய அரசை நோக்கி நீளும் சுட்டு விரல்” – பெகாசஸ் குறித்து ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்மொழிந்த சு.வெங்கடேசன் எம்பி!

இதில் முழுக்க முழுக்க மத்திய அரசின் தலையீடு இருப்பதாக காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இச்சூழலில் இதுதொடர்பாக விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்தை மதுரை எம்பி சு.வெங்கடேசன் முன்மொழிந்திருக்கிறார். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட அவர், “ஒட்டு கேட்‌பது அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரானது. தனிநபர் உரிமைகளுக்கு எதிரானது. ஜனநாயகத்துக்கு எதிரானது. இஸ்ரேலிய பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் வேவு பார்க்கப்படும் 5,000 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது.

“மத்திய அரசை நோக்கி நீளும் சுட்டு விரல்” – பெகாசஸ் குறித்து ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்மொழிந்த சு.வெங்கடேசன் எம்பி!

ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் , உயர்மட்ட பொறுப்புகளை வகித்தவர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் உள்ளன. இந்த பட்டியலில் இந்திய ஊடகவியலாளர்கள் 40 பேரின் பெயர்களும் இடம்பெற்றிருப்பதாக செய்தி. இது அதிர்ச்சி அளிக்கிற செய்தி. இஸ்ரேலிய ஐபிஓ நிறுவனம் தாங்கள் இந்த உளவு மென்பொருளை அரசுகளுக்கு மட்டுமே விற்பனை செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. அப்படியெனில், வேறு யார் வேவு பார்த்திருக்க முடியும்? அரசை நோக்கியே சுட்டு விரல்கள் நீள்கின்றன. இதுகுறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை முன் மொழிந்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.