‘யார் படம் ஓடினாலும் ஹீரோ அங்க நான் தான்டா’ – ’சர்’ ரவீந்திர ஜடேஜாவின் மெர்சல் பெர்பார்மென்ஸ்!

 

‘யார் படம் ஓடினாலும் ஹீரோ அங்க நான் தான்டா’ – ’சர்’ ரவீந்திர ஜடேஜாவின் மெர்சல் பெர்பார்மென்ஸ்!

கம்பேக்குக்குப் பெயர்போன ஸ்மித் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் சதம் அடித்து மீண்டும் கம்பேக் கொடுத்தார். ஆனால் கிரிக்கெட் உலகில் அதைப் பற்றியே பேச்சே இல்லை. மாறாக த்ரீ டைமன்ஸனல் ப்ளேயரான ஜடேஜாவின் ரன்அவுட்டும் பவுலிங் பெர்பார்மென்ஸும் தான் பேசுபொருளாகியுள்ளது. எங்கேயோ போக வேண்டிய ஸ்கோரை தடுத்து நிறுத்தி ஆஸ்திரேலியாவைத் தகர்த்த பெருமை ஜடேஜாவையே சாரும்!

‘யார் படம் ஓடினாலும் ஹீரோ அங்க நான் தான்டா’ – ’சர்’ ரவீந்திர ஜடேஜாவின் மெர்சல் பெர்பார்மென்ஸ்!

இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் தலா ஒரு வெற்றியை ருசித்திருந்த நிலையில் தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றுவருகிறது. சிட்னி பேட்டிங் பிட்ச் என்பதால் வழக்கம் போல கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்டத்தில் அவ்வப்போது மழை குறுக்கிட்டதால் 55 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.

கடந்த போட்டியில் சரியான வியூகங்களைக் கூர்தீட்டி களமிறங்கி ஆஸ்திரேலியாவிடமிருந்து வெற்றிக்கனியைப் பறித்திருந்தது. அதற்குக் காரணம் ஸ்டாராங் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஸ்மித்தையும் லபுஷானேயும் கட்டம் கட்டி தூக்கியதுதான். ஆனால் இம்முறை அந்த வியூகங்கள் சிட்னியில் எடுபடவில்லை. ரஹானே பிரஸ்மீட்டில் ஏ,பி,சி,டி என நான்கு பிளான்கள் வைத்திருப்பதாகக் கூறினார்.

‘யார் படம் ஓடினாலும் ஹீரோ அங்க நான் தான்டா’ – ’சர்’ ரவீந்திர ஜடேஜாவின் மெர்சல் பெர்பார்மென்ஸ்!

அடிலெய்டில் இறக்கிய பிளான் ஏ (லெக் சைடில் ஸ்டாராங் பீல்ட், ஆப் சைட் ப்ரீ) தவிர்த்து மற்ற பிளான்களை அவர் இறக்கவில்லை. இந்தியாவின் ஏ பிளானை நன்கு அறிந்து அபாரமாக ஆடி லபுஷானேவும் ஸ்மித்தும் அரைசதம் அடித்தனர்.

ரஹானே பிளான இறக்கலேனா என்ன என்று கூறி ஆல்ரவுண்டரான ஜடேஜா, சதத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த லபுஷானேவைக் காலி செய்தார். அந்த விக்கெட் தான் ஆட்டத்தின் போக்கையே அப்படியே மொத்தமாகத் திருப்பிப் போட்டது எனலாம். (கேம் சேஞ்சிங் மொமெண்ட்)

‘யார் படம் ஓடினாலும் ஹீரோ அங்க நான் தான்டா’ – ’சர்’ ரவீந்திர ஜடேஜாவின் மெர்சல் பெர்பார்மென்ஸ்!

லபுஷானே போன வேகத்தில் மேத்யூ வேடையும் பெவிலியனுக்கு சைலண்ட்டாக அனுப்பிவைத்தார் ஜடேஜா. ஆஸ்திரேலியாவின் ரன் வேட்டைக்கும் முட்டுக்கட்டை போட்டார். அடுத்துவந்த கிரினையும் டிம் பெய்னையும் பும்ரா தூக்க, துல்லியமான யார்க்கரைப் போட்டு கம்மின்ஸை ட்ரஸ்ஸிங் ரூமுக்கு டக் அவுட்டில் திரும்ப வைத்தார்.

அதுமட்டுமில்லாமல் இன்னொரு யார்க்கரையும் கைவசம் வைத்திருந்தார் போல. ஸ்டார்க்குக்குப் பின் களமிறங்கிய லயானுக்கு மற்றொரு யார்க்கரை சொருகி வலையில் வீழ்த்தி வந்த வேகத்திலேயே வழியனுப்பி வைத்தார். (நான் ஆபத்துல இல்ல வான்மதி, நான் தான் அந்த ஆபத்தே என்ற மீம் டயலாக்கை மனதுக்குள் ஓடவிட்டுக் கொள்ளவும்)

ஒருவேளை ரஹானே சொன்ன பிளான் பி, சி,டி எல்லாமே ஜடேஜா தானோ. அந்த அளவிற்கு ஆஸ்திரேலியாவைத் திணற திணற வச்சி செய்தார் ஜடேஜா. ”இதெல்லாம் சும்மா டிரெய்லர் தான்மா மெயின் பிக்சரே இனிமே தான்” என்பது போல கடைசியில் ஆஸ்திரேலியாவின் பெரிய தலைக்கட்டு ஸ்மித்துக்கே பெரிய ட்விஸ்ட்டை கொடுத்தார்.

‘யார் படம் ஓடினாலும் ஹீரோ அங்க நான் தான்டா’ – ’சர்’ ரவீந்திர ஜடேஜாவின் மெர்சல் பெர்பார்மென்ஸ்!

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் நான் போக மாட்டேன் என ஸ்மித் அடம்பிடித்து சதமடித்தார். கடந்த போட்டிகளில் அஸ்வினிடம் மண்டியிட்ட ஸ்மித் இந்த முறை டவுன் தி டிராக் வந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை வெளுத்து வாங்கினார். வழக்கம்போல ஹேட்டர்ஸ்களுக்கு பேட்டால் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

”எப்படி போட்டாலும் அடிக்கிறன்டா இவன்” என்று இந்திய வீரர்கள் நொந்தே போய்விட்டனர். இந்த நிலையில் ஸ்மித்திற்கு அடித்த ரன் பத்தவில்லை போல. ஸ்மித் இரண்டாவது ரன்னிற்கு ஓட, பந்து ஜடேஜா கையில் சிக்க, அவர் ஸ்டம்ப பாத்து அடிக்க, ஒருவழியா இன்னிங்ஸ் முடிய…. என்ன ஒரு கண்கொள்ளா காட்சி!

https://twitter.com/TangledWithYou_/status/1347391455577313282?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1347391455577313282%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.timesnownews.com%2Fsports%2Fcricket%2Farticle%2Fwatch-ravindra-jadeja-ends-steve-smith-s-brilliant-innings-with-a-rocket-throw-leaves-twitter-in-disbelief%2F704484

ஜடேஜா நெட் பவுலருக்கு கூட லாயக்கில்லை என்று கூறுபவர்களுக்கு மத்தியில் தன்னோட வேல்யூவை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

ஒருநாள், டி20 தொடர்களைத் தொடர்ந்து டெஸ்ட் தொடரிலும் இந்தியாவின் மோஸ்ட் வேல்யூபல் ப்ளேயர் (Most Valuable Player) என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபணமாக்கியுள்ளார். 62 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெளிநாட்டு மைதானங்களில் தனது பெஸ்ட்டை கொடுத்திருக்கிறார் ஜடேஜா.

தூற்றுவோர் தூற்றட்டும்… நதி போல ஓடிக் கொண்டிரு… வேர்வை வெற்றி தேடித் தரும் என்பதற்கான நிகழ்கால உதாரணம் ’சர்’ ரவீந்திர ஜடேஜா!