• December
    15
    Sunday

Main Area

Main



இனி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுத்தாளில் மாணவர்களின் பெயர் எழுதலாம் - பள்ளிக் கல்வித் துறை

தேர்வு
தேர்வு

2020ல் நடைபெறவுள்ள 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் தங்களது பெயரை தேர்வுத்தாளில் எழுத வசதி செய்யப்பட்டுள்ளது. 


இதுவரை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களின் விடைத்தாள்களில் தேர்வு எண் மட்டுமே குறியீடப்பட்டிருக்கும். மாணவர்களின் பெயரோ அல்லது பாலினமோ குறிப்பிடப்பட்டிருக்காது. பெயர் குறிப்பிடப்பட்டிருந்தால் விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் தவறு செய்ய நேரிடும் என்பதால் இந்த முறை பின்பற்றப்படாமல் இருந்தது. 

Exam

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “2020ல் நடைபெறவுள்ள 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் தங்களது பெயரை எழுத ஆங்கிலத்தில் 34 எழுத்துகள் எழுதும் வகையிலும், தமிழில் 45 எழுத்துகள் வரை எழுதும் வகையிலும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் இடம் தேவைப்பட்டால், அவற்றையும் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.