‘22% மட்டுமே தேர்ச்சி’ 10 ஆம் வகுப்பு தனித்தேர்வு முடிவால் தேர்வர்கள் அதிர்ச்சி!

‘22% மட்டுமே தேர்ச்சி’ 10 ஆம் வகுப்பு தனித்தேர்வு முடிவால் தேர்வர்கள் அதிர்ச்சி!

10 ஆம் வகுப்பு தனித்தேர்வு முடிவில் 22% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதன் படி 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தனித்தேர்வர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. அதனால் கடந்த செப்டம்பர் மாதம் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத்தேர்வுகள் நடத்தப்பட்டது.

‘22% மட்டுமே தேர்ச்சி’ 10 ஆம் வகுப்பு தனித்தேர்வு முடிவால் தேர்வர்கள் அதிர்ச்சி!

10ம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி அறிவித்திருந்தார். அதன் படி, இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த நிலையில், துணைத் தேர்வில் 22% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுமார் 39 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய நிலையில், 8 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.