மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு எதிரொலி: அரசின் இலவச நீட் பயிற்சி மையத்திற்கு படையெடுக்கும் மாணவர்கள்!

 

மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு எதிரொலி: அரசின் இலவச நீட் பயிற்சி மையத்திற்கு படையெடுக்கும் மாணவர்கள்!

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்துள்ளதால், அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த 2017 முதல் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 2017-ம் ஆண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. Speed Institute, Etoos India, E-Box என்று வெவ்வேறு தனியார் நிறுவனங்களின் மூலம் நீட் தேர்வுக்கான பயிற்சியானது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு எதிரொலி: அரசின் இலவச நீட் பயிற்சி மையத்திற்கு படையெடுக்கும் மாணவர்கள்!

நடப்பு கல்வியாண்டுக்கான ( 2020-2021 ) இலவச நீட் பயிற்சி வகுப்புகளை E-Box நிறுவனத்துடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறை நடத்த உள்ளது. இநிலையில், நீட் பயிற்சி வகுப்பில் சேர அரசுப்பள்ளி மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த கல்வியாண்டில் ( 2019-2020 ) தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 7,000-க்கும் மேற்பட்டோரில் 1,633 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதாலும், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமலுக்கு வந்ததாலும் அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. இதுவரை நடப்பு கல்வியாண்டுக்கான இலவச நீட் பயிற்சியைப் பெற 15,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கவிருந்த நிலையில், அதிகளவிலான மாணவர்கள் விண்ணப்பித்து வருவதால் சற்று தாமதமாக வகுப்புகள் தொடங்கும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.