காய்ச்சல் இருந்தால் பொதுத் தேர்வு எழுத முடியாதா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

 

காய்ச்சல் இருந்தால் பொதுத் தேர்வு எழுத முடியாதா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

ஜூன் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என்று அறிவித்த அரசு, கொரோனா வைரஸின் அதிவேக பரவலால் ஜூன் 15 ஆம் தேதி முதல் தொடங்கு என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே மீதமுள்ள 11 ஆம் வகுப்பு தேர்வுகளும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி தேர்வுகளை நடத்த அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதே போல பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டை இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் இருந்தால் பொதுத் தேர்வு எழுத முடியாதா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

இந்நிலையில் காய்ச்சல் இருக்கும் மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இருந்து விலக்களிப்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், பொதுத் தேர்வு அறையில் 10 பேர் மட்டுமே அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் காலை 10.30 மணிக்கு தேர்வு தொடங்கும் என்பதால் மாணவர்கள் 9.45க்கு தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.