பொதுத்தேர்வு எழுதவரும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் வீட்டிற்கு அனுப்பப்படுவர்- தமிழக அரசு!

 

பொதுத்தேர்வு எழுதவரும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் வீட்டிற்கு அனுப்பப்படுவர்- தமிழக அரசு!

ஜூன் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என்று அறிவித்த அரசு, கொரோனா வைரஸின் அதிவேக பரவலால் ஜூன் 15 ஆம் தேதி முதல் தொடங்கு என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே மீதமுள்ள 11 ஆம் வகுப்பு தேர்வுகளும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி தேர்வுகளை நடத்த அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதே போல பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டை இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் இருக்கும் மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இருந்து விலக்களிப்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

பொதுத்தேர்வு எழுதவரும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் வீட்டிற்கு அனுப்பப்படுவர்- தமிழக அரசு!

இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதவரும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் விருப்பத்தின் அடிப்படையில் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது. வீட்டிற்கு அனுப்பப்பவும் மாணவர்கள் துணை தேர்வில் தேர்வுகளை எழுதிக்கொள்ளலாம் என்றும், காய்ச்சல் இருந்தாலும் மாணவர்கள் விரும்பினால் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தால் மட்டுமே மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்றும், கைதொடா கருவி மூலம் தினசரி வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது