‘தங்க பிரேஸ்லெட்டை தொலைத்த மாணவன்’ பெற்றோருக்கு பயந்து தற்கொலை!

‘தங்க பிரேஸ்லெட்டை தொலைத்த மாணவன்’ பெற்றோருக்கு பயந்து தற்கொலை!

பரமத்தி அருகே தங்க பிரேஸ்லெட்டை தொலைத்த மாணவன், பெற்றோர்களிடம் சொல்ல பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘தங்க பிரேஸ்லெட்டை தொலைத்த மாணவன்’ பெற்றோருக்கு பயந்து தற்கொலை!

கரூர் மாவட்டம் பரமத்தி அருகே இருக்கும் குளம் நகரை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் பூபதியின் மகன் தீபக்(18). இவர் 12ம் வகுப்பை முடித்த நிலையில், கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்திருந்தார். தீபக் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்ததால் அவரது பெற்றோர் தங்க பிரேஸ்லெட் ஒன்றை வாங்கிக் கொடுத்ததாக தெரிகிறது. அந்த பிரேஸ்லெட்டை கையில் அணிந்திருந்த தீபக், நேற்று முன்தினம் விளையாடச் சென்ற போது அதனை தொலைத்திருக்கிறார்.

‘தங்க பிரேஸ்லெட்டை தொலைத்த மாணவன்’ பெற்றோருக்கு பயந்து தற்கொலை!

இதனை தனது நண்பர்களிடம் தெரிவித்த தீபக், நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிய இடங்களில் தேடிப்பார்த்தும் பிரேஸ்லெட் கிடைக்கவில்லையாம். பிரேஸ்லெட்டை தொலைத்ததை பெற்றோர்களிடம் சொல்ல பயந்த தீபக், வீட்டுக்கு செல்லக்கூடாது என எண்ணி அப்பகுதியில் இருக்கும் ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

‘தங்க பிரேஸ்லெட்டை தொலைத்த மாணவன்’ பெற்றோருக்கு பயந்து தற்கொலை!

தீபக்கின் சடலம் கிணற்றில் மிதந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தீபக்கின் பெற்றோருக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்து தீபக்கின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோர்களுக்கு பயந்து தீபக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.