கோபத்தில் வீட்டிலிருந்து வெளியேறிய மாணவி… பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்…

 

கோபத்தில் வீட்டிலிருந்து வெளியேறிய மாணவி… பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்…

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் உறவினர்களிடம் கோபித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறிய பள்ளி மாணவியை போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பஜார் காவல் நிலைய ஆய்வாளர் முத்துப்பாண்டி தலைமையில் போலீசார், நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அரண்மனை அருகே சிறுமி ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்தார். இதனை அடுத்து, அவரிடம் ஆய்வாளர் முத்துப்பாண்டி விசாரணை மேற்கொண்டார்.

அதில் அந்த சிறுமி பரமக்குடியை சேர்ந்தவர் என்பதும், ராமநாதபுரத்தில் உள்ள தனது சித்தி வீட்டில் தங்கியிருந்து, தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது. மேலும், மனவருத்தம் காரணமாக அவர் வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியே வந்து விட்டதும் தெரியவந்தது.

கோபத்தில் வீட்டிலிருந்து வெளியேறிய மாணவி… பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்…

இதனையடுத்து, காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் அந்த சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அளித்தார். அதனை தொடர்ந்து, அங்கு வந்த அதிகாரிகள் முன்னிலையில் சிறுமியை அவரது தந்தையிடம் பத்திரமாக ஒப்படைத்தார்.

இரவில் தனியாக நின்ற சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் இந்த செயலுக்கு, மாவட்ட எஸ்.பி., கார்த்திக் பாராட்டு தெரிவித்தார்.