ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தாததை தந்தை கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தாததை தந்தை கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

கோவையில் ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தாதது குறித்து தந்தை கண்டித்ததால், 14 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தாததை தந்தை கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

சின்ன தடாகம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த அகிலேஷ் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், அகிலேஷ் அதில் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. பணி நிமித்தமாக கேரளா சென்றிருந்த அவரது தந்தை தேவதாசனை போனில் அழைத்த அகிலேஷின் ஆசிரியர், அவர் சரிவர ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பது இல்லை எனக் கூறியிருக்கிறார்.

இதனால் கோபமடைந்த தேவதாசன் அகிலேஷை போனில் அழைத்துக் கண்டிக்கவே, மனமுடைந்த அகிலேஷ், குளியலறைக்குள் சென்று துண்டால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது.