முடி வெட்டி கொண்டு பள்ளிக்கு வர ஆசிரியர் அறிவுறுத்தியதால் 12 வகுப்பு மாணவன் தற்கொலை

 

முடி வெட்டி கொண்டு பள்ளிக்கு வர ஆசிரியர் அறிவுறுத்தியதால் 12 வகுப்பு மாணவன் தற்கொலை

சென்னையில் முடி வெட்டி கொண்டு பள்ளிக்கு வர வேண்டும் என ஆசிரியர் கண்டித்ததால் 12 ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் குமார்(15). இவர் மதுரவாயலில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த 10 மாதங்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. விடுமுறை என்பதால் சஞ்சய் குமார் ஆசைப்பட்டு முடியை வளர்த்ததாக கூறப்படுகிறது.

முடி வெட்டி கொண்டு பள்ளிக்கு வர ஆசிரியர் அறிவுறுத்தியதால் 12 வகுப்பு மாணவன் தற்கொலை

இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால் 10 மாதங்களுக்கு பிறகு 10,12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. சஞ்சய் குமார் இன்று பள்ளிக்கு சென்ற போது முடி நீளமாக இருந்ததால் முடியை வெட்டிவிட்டு வருமாறு ஆசிரியர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சஞ்சய் குமார் வீட்டிற்கு வந்து அவரது அறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாக சஞ்சய் குமார் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த சூளைமேடு போலீசார் சஞ்சய் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சஞ்சய் குமாருக்கு காதலில் பிரச்சனை இருந்து வந்ததாக அவரது நண்பர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.