‘ஆன்லைன் வகுப்புக்கு மொபைல் வாங்குவதற்காக’ டீ விற்கும் மாணவன்!

 

‘ஆன்லைன் வகுப்புக்கு மொபைல் வாங்குவதற்காக’ டீ விற்கும் மாணவன்!

ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லாமல் தவித்து வரும் மாணவன் ராகுல், டீ விற்று செல்போன் வாங்க பணம் சேர்த்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘ஆன்லைன் வகுப்புக்கு மொபைல் வாங்குவதற்காக’ டீ விற்கும் மாணவன்!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளி ஒருவரின் மகன் ராகுல். இவர் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அக்கா ஒருவர் இருக்கிறார். அவரும் பள்ளியில் படித்து வருவதாக தெரிகிறது. கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ராகுலின் குடும்பத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தளர்வுகள் அளிக்கப்பட்டும் வறுமையில் இருந்து அவரது குடும்பம் மீளவில்லையாம். இதனால் மொபைல் இல்லாமல் தவித்து வந்த ராகுல், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

‘ஆன்லைன் வகுப்புக்கு மொபைல் வாங்குவதற்காக’ டீ விற்கும் மாணவன்!

எப்படியாவது மொபைல் வாங்க வேண்டும் என முடிவெடுத்த ராகுல், தனது அக்கா மற்றும் அம்மாவின் உதவியுடன் டீ விற்கலாம் என முடிவெடுத்துள்ளார். தான் வசித்து வரும் பகுதியிலும் அருகில் இருக்கும் வணிக வளாகங்களிலும் சென்று டீ விற்ற ராகுல், இந்த வருமானத்தில் தனக்கும் தன் அக்காவுக்கும் செல்போன் வாங்க முடியும் என நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார். மேலும், தனது குடும்ப செலவுகளையும் இதில் வரும் வருமானத்தில் ஈடுகட்ட முடிகிறது என உருக்கமாக கூறியிருக்கிறார் மாணவர் ராகுல். சிறு வயதில் குடும்பத்தை கஷ்டத்தை உணர்ந்து, டீ விற்கும் ராகுலுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.