‘நீண்ட நேரம் செல்போனில் விளையாட்டு’ பெற்றோர்கள் கண்டித்ததால் மாணவி தற்கொலை!

 

‘நீண்ட நேரம் செல்போனில் விளையாட்டு’ பெற்றோர்கள் கண்டித்ததால் மாணவி தற்கொலை!

சீர்காழி அருகே பெற்றோர்கள் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் வசித்து வந்தவர் மாணவி ஆதித்யா. இவர் 11ம் வகுப்பு படித்து வந்த நிலையில், ஆன்லைன் வகுப்புக்காக பெற்றோர்கள் செல்போன் வாங்கிக் கொடுத்ததாக தெரிகிறது. ஆதித்யா நாள் முழுக்க அந்த செல்போனில் கேம் விளையாடிக் கொண்டே இருந்திருக்கிறார். இதனால் கடுப்பான பெற்றோர், மாணவியை கண்டித்திருக்கின்றனர்.

‘நீண்ட நேரம் செல்போனில் விளையாட்டு’ பெற்றோர்கள் கண்டித்ததால் மாணவி தற்கொலை!

மனமுடைந்த மாணவி அவரது அறையிலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். காலை வெகுநேரம் ஆகியும் மாணவி அறையில் இருந்து வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கதவை உடைத்து பார்த்த போது மாணவி சடலமாக கிடந்ததாக தெரிகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெற்றோர்கள் திட்டியதால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.