தென்காசி- செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் மாணவர் தற்கொலை

தென்காசி- செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் மாணவர் தற்கொலை

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால், பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புளியங்குடி அடுத்த நெல்கட்டும்செவல் பச்சேரி பகுதியை சேர்ந்த கேந்திராஜா என்பவரது மகன் இராமர்(17). வாசுதேவநல்லூரில் உள்ள தனியார்

தென்காசி- செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் மாணவர் தற்கொலை

பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வருகின்றனர். கொரோனா காரணமாக கல்லூரி திறக்கப்படாதாதல் வீட்டில் இருந்தவாறே செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்துளளார். இந்நிலையில், சில நாட்களாக இராமர் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்காமல், செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை தந்தை கேந்திராஜா கண்டித்ததாக

தென்காசி- செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் மாணவர் தற்கொலை

கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இராமர், வீட்டில் எலுமிச்சைக்கு வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி இராமர் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.