• August
    24
    Saturday

Main Area

Main



விடுதியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கழுத்தறுத்து கொலை!

கொலை
கொலை
Loading...

ஆந்திரவில் பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதியில் தங்கியிருந்த 3 ஆம் வகுப்பு படித்த மாணவன் விடுதி குளியல் அறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

hostel

ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்த தாசரி ஆதித்யா மற்றும் அவனுடைய அண்ணன் ஆகியோர் அங்குள்ள அரசு பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தனர். தாசரி ஆதித்யா 3 ம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவனுடைய அண்ணன் 4 ம் வகுப்பு படிக்கிறான். விடுதியில் உள்ள அறைகளில் ஒரே அறையில் இரண்டு பேரும் தூங்குவது வழக்கம். நேற்று இரவு தாசரி ஆதித்யா அறைக்கு வரவில்லை. எனவே ஆதித்யாவின் அண்ணன் பக்கத்து அறையில் தம்பி தூங்குவதாக கருதி தேடிபார்க்காமல் இருந்துவிட்டான். இந்த நிலையில் இன்று காலை ஹாஸ்டல் குளியலறைக்கு சென்ற மாணவர்கள் அங்கு ஆதித்யா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஹாஸ்டல் வார்டனுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் ஆதித்யாவின் பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

murder

இந்த நிலையில் ஹாஸ்டலுக்கு வந்த போலீசார் ஆதித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விடுதி வார்டன் மற்றும் சில மாணவர்கள் ஆகியோரிடம் விசாரனை நடத்துகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.